ஆன்மிகப் பயணம் – வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவத்தலம்

சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு சிவக் கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிறப்பு பூஜை செய்து, இறைவனை வழிபட்டு அருள் பெற்றேன்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோவில், மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்துடன் தொடர்புடைய பெருமைமிக்க சிவத்தலமாக விளங்குகிறது. சோழ மன்னர்களின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும், தமிழர்களின் தொன்மையான சிவ வழிபாட்டு மரபையும் இன்றளவும் பறைசாற்றும் புனிதத் தலம் இது.
சிவபெருமானின் திருவருளால் அனைவரது வாழ்விலும் அமைதி, ஆரோக்கியம், வளம் மற்றும் மகிழ்ச்சி பெருகட்டும்.
இந்த அரிய ஆன்மிக அனுபவத்திற்கும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்திருக்கோவிலில் வழிபடுவதற்கான வாய்ப்பிற்கும் அன்பு நண்பர் திரு. அ. செ. புகழேந்தி செட்டியார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் நமசிவாய!















