BREAKING NEWS | 28 ஆகஸ்ட் 2026

முன்னாள் மனிதவள அமைச்சரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு எதிரான மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் RM450,000 பிணைத் தொகையை நிர்ணயித்துள்ளது.
அவருக்கு எதிராக மொத்தம் RM1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், குற்றச்சாட்டுகளை சரவணன் மறுத்துள்ளதுடன், வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ளார்.
மேலும், அரசுத் தரப்பு சாட்சிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புகொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் அடுத்த குறிப்பிடல் விசாரணை 29 செப்டம்பர் 2026 அன்று நடைபெறவுள்ளது.
குறிப்பு: நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர் சட்டப்படி குற்றமற்றவர் எனக் கருதப்படுகிறார்.















