குலுவாங் மக்களுக்கு உடனடி உதவி வழங்கிய MIPP தலைவர்கள் – சமூக ஊடகங்கள் மூலம் வந்த கோரிக்கைக்கு மனிதநேய நடவடிக்கை

15 மே 2026 |    குலுவாங்  ஜொகூர்

குலுவாங் மக்களுக்கு உடனடி உதவி வழங்கிய MIPP தலைவர்கள் – சமூக ஊடகங்கள் மூலம் வந்த கோரிக்கைக்கு மனிதநேய நடவடிக்கை

குலுவாங், ஜொகூரை சேர்ந்த திருமதி குளோரியா அவர்களுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக அக்கறையுடன் செயல்பட்ட Malaysian Indian People’s Party (MIPP) குலுவாங் தலைவர் திரு அரு அவர்களின் விரைவான நடவடிக்கை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

கோலாலம்பூரை சேர்ந்த DR எஸ்.பி. பிரபா அவர்கள், “நான் ஒரு மலேசியன்” மற்றும் “MKU Malaysia Kalai Ulagam” இணைய ஊடகங்கள் வாயிலாக உதவி கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, MIPP ஜொகூர் மாநில தலைவர் டாக்டர் அஷ்வின் அவர்கள் உடனடி கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட பகுதித் தலைவர்களிடம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து குலுவாங் பகுதியில் வசிக்கும் திருமதி குளோரியா அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் உடனடியாக வழங்கப்பட்டன. பொதுமக்கள் தேவையை உணர்ந்து தாமதமின்றி செயல்பட்ட திரு அரு அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் MIPP அமைப்பின் மனிதநேய பணிகள், மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக அவசர உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு உடனடி உதவி வழங்கும் பணியில் அமைப்பின் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர்.

DR அஷ்வின் மற்றும் திரு அரு ஆகியோரின் இந்த மனிதநேய செயலை பல சமூக அமைப்புகள் மற்றும் இணைய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

“மக்கள் பிரச்சினைகளை உடனடியாக கவனித்து உதவிக்கரம் நீட்டுவது தான் உண்மையான சமூக சேவை” என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திரு அரு அவர்களுக்கும், டாக்டர் அஷ்வின் அவர்களுக்கும், மனிதநேய அடிப்படையில் உதவி செய்ததற்காக சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *