கோம்பாக் மாவட்ட சதுரங்கப் போட்டியில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

 

தேதி: 25 ஏப்ரல் 2026

கோம்பாக் மாவட்ட சதுரங்கப் போட்டியில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

கோம்பாக்: கடந்த 22 மற்றும் 23 ஏப்ரல் 2026 ஆகிய தினங்களில் கோம்பாக் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி சுங்கை பூலோ இடைநிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 10 மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

போட்டியின் 12 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி 7-ஆம் இடத்தைப் பெற்றனர். மாணவிகளின் இந்த சாதனை பள்ளிக்குச் சிறப்பையும் பெருமையையும் சேர்த்துள்ளது.

போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு உற்சாகமளித்து வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும், தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினருக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

“தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு” என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், இச்சாதனை பள்ளியின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *