மலேசியா தடகள கவுன்சில் கூட்டத்தின் இரண்டாவது கசிந்த ஒலிப்பதிவு வெளியாகியது

கோலாலம்பூர் ஏப் 23

மலேசிய தடகள கவுன்சில் கூட்டத்தின் இரண்டாவது கசிந்த ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது.

மலேசிய தடகள சங்கத்தின் தலைவர் காரீம் இப்ராஹிற்கு சங்கத்தின் துணைத் தலைவர் வான் ஹிஷாம் வான் சாலே ஆதரவு தெரிவிப்பது தெரியவந்துள்ளது.

மேலும் காரீமின் தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ள உலக தடைகள சம்மேளனத்தின் உத்தரவுப்படி செயல்பட்டால், கவுன்சில் உறுப்பினர்கள் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கும் குரல் அந்த பதிவில் உள்ளது.

முன்னதாக, whatsapp மூலம் அநாமதேயமாகப் பகிரப்பட்ட முதல் ஒலிப்பதிவு வெளியான ஒரு நாளுக்குப் பிறகு இந்த இரண்டாவது கிளிப் வெளிவந்துள்ளது. அந்த முதல் கசிவு உலக தடகள அமைப்பால் அனுப்பப்பட்ட கடிதத்தின் முழு விவரங்களும் கவுன்சில் உறுப்பினர்களுக்கு பகிரப்படவில்லை என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஒலிப்பதிவுகள் கவுன்சில் எவ்வாறு முக்கிய தகவல்களை கையாண்டது மற்றும் அதன் ஆலோசனைகளை எவ்வாறு நடத்தது என்பதின் மீது கவனத்தை திருப்பி உள்ளன.

சமீபத்திய ஆடியோவில், 2027 கோலாலம்பூர் சீ கேம்ஸ்(SEA GAMES) முடியும் வரை காரீம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பது தமது தனிப்பட்ட விருப்பம் என்று வான் ஹிஷாம் கூறுகிறார்.

கடந்த ஜூன் மாதம் காரீமை தாம் எதிர்த்த போதிலும், இப்போது அவரை விளையாட்டின் நலனுக்காக உழைக்கும் ஒரு மனசாட்சி உள்ள தலைவராக கருதுவதாகும் வான் ஹிஷாம் மேலும் கூறுகிறார்.

அதே ஏப்ரல் 9 கூட்டத்தில் உலக தடகள சம்மேளனத்தின் கடிதத்தை தொடர்ந்து காரீமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், கவுன்சில் உறுப்பினர்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என வான் ஹிஷாம் எச்சரித்தார்.

உலகளாவிய அமைப்பிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து கவுன்சில் விவாதத்தின் போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

மலாக்கா தடகள சங்கத்தின் தலைவர் பாட்சில் பக்கார் கூறுகையில், கூட்டத்தின் போது இந்த விவகாரம் முன் வைக்கப்பட்ட விதம் குறித்து இந்த கருத்துக்கள் கவலையை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

‘ஒரே விவாதத்தில் வழக்குத் தொடரப்படும் அபாயம் குறித்து பேசப்படும் போது, அது உறுப்பினர்களை தங்கள் விருப்பங்களை தேர்ந்தெடுக்கும் முறை பதிக்கலாம்’என தேசிய அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான பாட்சில் பக்கார் தெரிவித்தார்.

காரீமுக்கு வான் ஹிஷாம் ஆதரவு தெரிவித்த நேரம் குறித்தும் பாட்சில் கேள்வி எழுப்பினார்.

‘இந்த விஷயம் இன்னும் பரிசீலனையில் உள்ளது. அந்த சூழலில் வெளிப்படுத்தப்படும் எந்த ஒரு நிலைப்பாடும் முக்கியத்துவம் வாய்ந்தது’ என அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *