மலேசிய இந்து சங்கத்தின் 60-ஆம் ஆண்டு வைரவிழா இன்று கோலாலம்பூரில் உள்ள கலா மண்படத்தில் சிறப்பாக நடைபெற்றது

கோலாலம்பூர், 4 ஏப்ரல் 2026

மலேசிய இந்து சங்கத்தின் 60-ஆம் ஆண்டு வைரவிழா இன்று கோலாலம்பூரில் உள்ள கலா மண்படத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ். சுப்ரமணியம் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.

விழாவின் பின்னர் செய்தியாளர்களுடன் உரையாடிய இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன், “தமிழ்நாட்டில் மேலோங்கி வரும் சாதி கலாச்சாரம் மலேசியாவில் ஊடுருவி வருகிறது. இதை நிறுத்த இந்து சங்கம் முழுமையாக போராடும்” என்றார்.

தங்க கணேசன் மேலும், “மலேசியாவில் தமிழர், தெலுங்கர், மலையாளி போன்ற பல இனங்களை சார்ந்த இந்துகள் வாழ்கிறார்கள். எங்களை முதன்மையாக இந்துகளாக அடையாளப்படுத்துவதே முக்கியம். இங்கு சாதி அடையாளம் தேவை இல்லை” என்று வலியுறுத்தினார்.

சாதி அடையாளத்தைப் போக்க இந்து சங்கம் திட்டமிட்டதாகவும், அதன் மீதான செயல்பாடுகளை முன்னெடுக்கும் வாய்ப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *