அக்டோபர் 10, 2025 | கோலாலம்பூர்
மடாணி அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவு திட்டத்தை பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று (அக்.10) மக்களவையில் தாக்கல் செய்தார்.
மலாய் பாரம்பரிய ஆடையில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் மதியம் 4 மணிக்கு மக்களவையில் நுழைந்து தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.
இந்த ஆண்டு 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் கருப்பொருளாக “BELANJAWAN RAKYAT” (மக்களுக்கான பட்ஜெட்) என அறிவிக்கப்பட்டது.
அது மக்களின் நலன், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமத்துவ வளர்ச்சியை மையமாகக் கொண்டதாக பிரதமர் கூறினார்.
அவரது உரையின் தொடக்கத்தில், “இந்த பட்ஜெட் மக்கள் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. பொருளாதார வளர்ச்சி மக்கள் வாழ்க்கையில் நேரடியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பது மடாணி அரசாங்கத்தின் நோக்கம்,” என பிரதமர் வலியுறுத்தினார்.
அவரது கூற்றுப்படி, 2026ஆம் ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் தொகை 419.2 பில்லியன் ரிங்கிட், அதில் முக்கியமாக
-
கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கு முக்கிய ஒதுக்கீடு,
-
சுகாதார துறையில் சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகள்,
-
சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு,
-
பசுமை பொருளாதாரத்திற்கான திட்டங்கள்,
மற்றும் -
மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பல நலத்திட்டங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டின் மூலம், மடாணி அரசாங்கம் தனது வாக்குறுதியான “மக்கள்மைய அரசியல் மற்றும் பொருளாதாரம்” நோக்கை மேலும் வலுப்படுத்துவதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.














