“பிந்தாங் மின்னல் 2025” – மின்னல்FM இசைப் போட்டி வெற்றிகரமாக நிறைவுற்றது

கோலாலம்பூர், செப்டம்பர் 6: இளைஞர்களின் பாடும் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் மின்னல்FM ஆண்டுதோறும் நடத்தி வரும் “பிந்தாங் மின்னல்” இசைப் போட்டி, இந்த ஆண்டும் மாபெரும் வெற்றியுடன் நிறைவடைந்தது.
முதன்முறையாக ஐந்து மாநிலங்களில் – நெகிரி செம்பிலான், பினாங்கு, பேராக், பாஹாங் மற்றும் கிளாங் – நேரடிக் குரல் தேர்வுகள் நடத்தப்பட்டன. நேரில் பங்கேற்க முடியாதவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தேர்வு வாய்ப்பு வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகமாக இணைந்தனர்.
நீதிபதிகளின் தேர்வுகளுக்குப் பிறகு 10 பேர் அரையிறுதிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களில் 6 பேர் இறுதிச் சுற்றுக்குப் முன்னேறினர்.
இறுதிச்சுற்று விழா
செப்டம்பர் 6 ஆம் தேதி, ஆங்காசாபுரி ஆடிட்டோரியம் ஸ்ரீ அங்காசாவில் நடைபெற்ற இறுதிச் சுற்று, இசை ரசிகர்களால் நிரம்பிய மாபெரும் நிகழ்வாக அமைந்தது.
வெற்றியாளர்கள் பட்டியல்
-
🥇 முதல் பரிசு – ஐப்ஷேகாப்ரியன்
-
RM10,000 ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்

-
-
🥈 இரண்டாம் பரிசு – உன்னிதீவன்
-
RM7,000 ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்

-
-
🥉 மூன்றாம் பரிசு – தெசியலன்
-
RM5,000 ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்

-
-
🌟 நீதிபதிகள் சிறப்பு விருது – நவீனா
-
RM3,000 ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம், சான்றிதழ்

-
-
🎖️ ஆறுதல் பரிசு – ஆரோன் & கண்மணி
தொடரும் பாரம்பரியம் 
இசை உலகம் எவ்வளவு மாற்றமடைந்தாலும், தரம், தொன்மை மற்றும் உண்மையான கலை ஆர்வம் நிறைந்த மேடையாக மின்னல்FM-இன் “பிந்தாங் மின்னல்” தொடர்கிறது. இளம் குரல்களுக்கு மேடையேறும் சிறந்த வாய்ப்பாகவும் இது திகழ்கிறது.
photo by MINNALFM & SUSIAL DEWI















