22 ஆகஸ்ட் 2026

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் வருமானம் குறைந்த ஏழைப் பெண்களுக்கு உதவும் வகையில், மலேசியா நாட்டின் மக்கள் ஓசை நாளிதழின் புகைப்படக் கலைஞர் மலையாண்டி அவர்கள் சார்பில் சேலைகள் மற்றும் பஞ்சாபி உடைகள் வழங்கப்பட்டன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் நோக்கத்திலும், அவர்களுக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கும் வகையிலும் இந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் ஆலவயல் பிடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழை மற்றும் வருமானம் குறைந்த பெண்கள் பயனடைந்தனர். தேவையுள்ள மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் மலையாண்டி அவர்கள் இந்த நலத்திட்ட உதவியை மேற்கொண்டார்.
சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு தனிநபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் முன்வந்து உதவுவது, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
மலையாண்டி அவர்களின் இந்த மனிதநேய முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.















