மலேசிய தொழில்முனைவோரின் பெருமை – தென்னிந்திய நட்சத்திரம் விருதுகள் 2026-ல் டாக்டர் ஷாம் பிரசாத் ‘Global Entrepreneur of the Year Award’ வென்றார்

27 ஜூலை 2026

மலேசியாவின் ஆரம்பக் குழந்தைகள் கல்வித் துறையில் முன்னணி பெண் தொழில்முனைவோராக திகழும் டாக்டர் ஷாம் பிரசாத், South Indian Nakshatram Awards 2026 நிகழ்வில் வழங்கப்பட்ட “Global Entrepreneur of the Year Award” என்ற உயரிய சர்வதேச விருதைப் பெற்று மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

SHE Awards ஏற்பாடு செய்த இவ்விழாவில், தொழில்முனைவு, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் Franchise வழங்குநராக (First Indian Woman Franchisor) திகழும் அவர், Sunshine Educational Group (M) Sdn. Bhd. நிறுவனத்தின் மூலம் ஆரம்பக் குழந்தைகள் கல்வித் துறையில் புதுமையான மாற்றங்களை உருவாக்கி வருகிறார்.

இந்த விருது அவரது நீண்டகால அர்ப்பணிப்பு, கல்வி மீதான அக்கறை, மற்றும் சர்வதேச அளவில் மலேசிய கல்வி தரத்தை உயர்த்தும் முயற்சிகளுக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

மேலும், Sunshine Educational Group தனது உலகளாவிய விரிவாக்கத்தின் முக்கிய கட்டமாக இந்தியாவில் SunQids India Private Limited நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தனது கல்விச் சேவையை விரிவுபடுத்தியுள்ள நிறுவனம், அடுத்த கட்டமாக இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளிலும் தனது கல்வி வலையமைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

மலேசியாவில் உருவான கல்வி நிறுவனத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் இந்த முயற்சி, மலேசிய தொழில்முனைவோரின் திறமையையும் உலகளாவிய பார்வையையும் வெளிப்படுத்துகிறது.

இவ்விருது வழங்கும் விழாவில், “Maaman”, “Karuppu” உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்வாசிகா விஜய்யுடன் இணைந்து இந்த உயரிய விருதைப் பெற்றது டாக்டர் ஷாம் பிரசாதுக்கு மேலும் பெருமை சேர்த்தது.

விருதைப் பெற்ற பின்னர் டாக்டர் ஷாம் பிரசாத் கூறுகையில், இந்த அங்கீகாரம் தனக்கே மட்டுமல்ல; தனது கணவர் டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத், அவரது குடும்பத்தினர், நிறுவனத்தின் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஊழியர்கள், Franchise பங்குதாரர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் சொந்தமானது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“இந்த விருது எனது வெற்றியின் அடையாளம் மட்டுமல்ல; என்னை நம்பிய அனைவரின் கனவுகளுக்கும் கிடைத்த அங்கீகாரம். இளம் தலைமுறையை கல்வியின் மூலம் வலுப்படுத்தவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், மலேசியாவில் பிறந்த கல்வி நிறுவனத்தை உலகளாவிய பிராண்டாக உயர்த்தவும் தொடர்ந்து பாடுபடுவேன்,” என்றார்.

மலேசியாவில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் தற்போது இந்தியாவை எட்டியுள்ளது. விரைவில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் விரிவடைய உள்ள Sunshine Educational Group, உலகளாவிய கல்வித் துறையில் மலேசியாவின் பெயரை மேலும் உயர்த்தும் என்ற நம்பிக்கை கல்வி மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் நிலவுகிறது.

டாக்டர் ஷாம் பிரசாதின் இந்த சாதனை, மலேசிய இந்திய சமூகத்திற்கும், நாட்டின் தொழில்முனைவு மற்றும் கல்வித் துறைக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *