கோலாலம்பூர், 25 ஜூலை 2026

மலேசிய வானொலி தொலைக்காட்சி (RTM)-யின் MINNALfm, உள்ளூர் இந்தியப் படைப்பாற்றல் துறைக்கு வலுவூட்டும் நோக்கில் “உள்ளூர் இந்தியப் படைப்பாற்றல் துறையை மேம்படுத்தும் நிகழ்ச்சி”யையும் MINNALfm பாடல் வெளியீட்டையும் 2026 ஜூலை 25ஆம் நாள் சனிக்கிழமை , காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, பி. ராம்லி அரங்கம் , விஸ்மா ரேடியோ, அங்காசாபுரி கோத்தா மீடியா கோலாலம்பூரில் நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சி, மலேசிய இந்தியக் கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், திரைப்பட மற்றும் ஊடகத் துறையினர் உள்ளிட்ட படைப்பாளர்களின் திறமைகளை ஊக்குவித்து, அவர்களுக்கான வளர்ச்சி வாய்ப்புகளை அடையாளம் காட்டும் MINNALfm-இன் தொடர் முயற்சிகளுள் ஒன்றாகும்.
உள்ளூர் இந்தியக் கலைஞர்களின் திறமைகள் மற்றும் படைப்புகளை மேலும் அதிகமானவர்களிடம் கொண்டு சேர்க்கும் மேடையாக MINNALfm தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அவர்களின் கலைப் பயணத்தை ஊக்குவித்து, புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, மலேசிய இந்தியப் படைப்பாற்றல் துறையின் நிலையான வளர்ச்சிக்கும் இந்த முயற்சி முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பல்வேறு அரசுசார் நிறுவனங்களும் படைப்பாற்றல் துறையைச் சார்ந்த நிறுவனங்கள் தகவல் மற்றும் ஆலோசனை வழங்கும் சிறப்பு முகப்புகளையும் அரங்குகளையும் (Booth) அமைத்துள்ளன.

பங்கேற்றுள்ள அமைப்புகள்:
MYIPO (Perbadanan Harta Intelek Malaysia) – காப்புரிமை (Copyright), வர்த்தக முத்திரை (Trademark), அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பதிவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள்.
FINAS (Perbadanan Kemajuan Filem Nasional Malaysia) – திரைப்படம், தொலைக்காட்சி, இலக்கவியல் உள்ளடக்க உருவாக்கம், திரைப்பட நிதியுதவி, பயிற்சி மற்றும் தொழில்துறை மேம்பாட்டு வாய்ப்புகள் பற்றிய தகவல்கள்.
MYCV (Malaysia Creative Ventures) – படைப்பாற்றல் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான தொழில்முனைவு, வணிக மேம்பாடு, சந்தைப்படுத்தல் மற்றும் துறை சார்ந்த வாய்ப்புகள் குறித்த வழிகாட்டல்கள்.
IPPTAR (Institut Penyiaran dan Penerangan Tun Abdul Razak) – ஒளிபரப்பு, ஊடகம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி, கல்வி மற்றும் சான்றிதழ் திட்டங்கள் தொடர்பான தகவல்கள்.
இந்தக் கண்காட்சி அரங்குகள் மூலம் கலைஞர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்து, தங்கள் கலைப் படைப்புகளைப் பாதுகாப்பது, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள், நிதியுதவிகள், பயிற்சிகள் மற்றும் அரசின் பல்வேறு முயற்சிகள் குறித்து விரிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்ப்பு கிட்டியுள்ளது.

இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, MINNALfm-இன் புதிய பாடல் அதிகாரப்படியாக வெளியீடு காண்கிறது. பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்தப் பாடல், MINNALfm-இன் புதிய அடையாளத்தையும், நேயர்களுடனான நெருக்கமான உறவையும், உள்ளூர் திறமைகளை வளர்த்தெடுக்கும் அதன் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது.















