24 மே 2026 | செலாயாங்

சிலாங்கூர் மாநில அரசியலில் மக்கள் நல சேவையால் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள Gunaraj George அவர்களுக்கு, Majlis Perbandaran Selayang வழங்கிய “Legasi Jasa Sanjungan Budi, Julangan Jasa” என்ற சிறப்பு விருது பெரும் மரியாதையையும் கவுரவத்தையும் பெற்ற நிகழ்வாக அமைந்தது.
நேற்று இரவு நடைபெற்ற சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம், அவரது நீண்டகால அர்ப்பணிப்பும் மக்களுக்கான சேவையும் பாராட்டப்படும் ஒரு முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.
விருது பெற்ற பின்னர் தனது நன்றியைத் தெரிவித்த அவர், “இந்த விருது எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாகும். ஏனெனில், நான் Majlis Perbandaran Selayang-இல் சுமார் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். அதன் பின்னரே செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது,” என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், மஜ்லிஸ் பெர்பந்தாரான் செலாயாங் நிர்வாக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றிய காலத்தில் பெற்ற அனுபவங்கள், நினைவுகள் மற்றும் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்புகள் தனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனுடன், சிலாங்கூர் மாநில முதல்வரான Amirudin Shari அவர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். “எனக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட ஆதரவு, நம்பிக்கை மற்றும் பாராட்டுகள் எனது அரசியல் மற்றும் மக்கள் சேவையின் பயணத்தில் மிகப்பெரிய ஊக்கமாக உள்ளன,” என அவர் கூறினார்.
இந்த அங்கீகாரம், மக்கள் நலன், நேர்மை, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து சேவை செய்ய மேலும் உற்சாகமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் வட்டாரங்களிலும் சமூக அமைப்புகளிலும் இந்த விருது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் Gunaraj George அவர்களின் நீண்டகால மக்கள் சேவையை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
“மக்களுக்காக உழைக்கும் தலைவர்களுக்கு கிடைக்கும் மரியாதை இது,” என்று நிகழ்வில் பங்கேற்றோர் கருத்து தெரிவித்தனர்.
வாழ்க மக்கள் சேவை!
வாழ்க YB Dr குணராஜ் ஜார்ஜ்!














