போலி பிங்காஸ் விளம்பரங்கள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு சிலாங்கூர் அரசின் கடும் எச்சரிக்கை

போலி பிங்காஸ் விளம்பரங்கள் அதிகரிப்பு – பொதுமக்களுக்கு சிலாங்கூர் அரசின் கடும் எச்சரிக்கை
ஷா ஆலாம், டிசம்பர் 12

சிலாங்கூர் மாநிலத்தில் பிங்காஸ் (BINGKAS – Bantuan Kehidupan Sejahtera Selangor) உதவித்திட்டத்தை பயன்படுத்தி மோசடி முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு பொதுமக்களுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சமூக நலனுக்கான மாநில எக்ஸ்கோ அன்ஃபால் சாரி, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத விளம்பரங்கள், போலியான இணைப்புகள் மற்றும் ‘முகவர்’ என தங்களை அறிமுகப்படுத்தும் நபர்கள் குறித்து மாநில மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பிங்காஸ் உதவிக்கு விண்ணப்பிக்க ONLY 2 அதிகாரப்பூர்வ சேனல்கள்

(SEL) App மூலம் விண்ணப்பம் bingkasselangor.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம்  இந்த இரண்டு சேனல்களைத் தவிர வேறு எந்த இணைப்பும், சமூக ஊடகப் பக்கங்களும், கூகுள் படிவங்களும், வாட்ஸ்அப் இணைப்புகளும் சரியானவை அல்ல மற்றும் அங்கீகரிக்கப்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும்,

எவ்வித முகவர்களும் நியமிக்கப்படவில்லை -மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை
என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அதிகாரிகள், போலியான பிங்காஸ் இணைப்புகள் பெரும்பாலும்

IC எண், வீட்டு முகவரி,  வங்கி விவரங்கள், குடும்ப வருமான தகவல்
போன்ற முக்கியமான தரவுகளை களவாடுவதற்காகவே பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கின்றனர்.

‘SINGLE’ அல்லது ‘STEP’ போன்ற பெயர்களைப் பயன்படுத்தி பரவிவரும் சந்தேகமான விளம்பரங்கள் அல்லது இணைப்புகளை உடனடியாக

அதிகாரிகளிடம் புகார் செய்யவும் அல்லது STEP திட்டத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களுக்கு தெரியப்படுத்தவும்
என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு Selangor Care Assurance (Skim Penjajaran Selangor) கீழ் அறிமுகமான பிங்காஸ், முன்பு வழங்கப்பட்ட

KISS (Kasih Ibu Smart Selangor) KISS IT (ஒற்றைத் தாய்மார்களுக்கு) என்ற திட்டங்களுக்கு மாற்றாக தொடங்கப்பட்டது.

மாநில அரசு கடந்த ஆண்டு, திட்டத்தின் தகுதி விதிகளை தளர்த்தி, குடும்ப வருமான வரம்பை RM3,000 இலிருந்து RM5,000 க்குள் உயர்த்தியது. இதன் மூலம் மேலும் அதிக பி40 மற்றும் எம்40 தொடக்க வர்க்கக் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைய முடிகிறது.

மற்றவர்களுடன் தனிப்பட்ட விவரங்களை பகிர்வதற்கு முன்,

இணைப்பு சரிபார்க்கப்பட்டுள்ளது தானா? SELangkah அல்லது bingkasselangor.com தளத்துக்குச் செல்கிறதா?
என்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

சிலாங்கூர் அரசு, பிங்காஸ் உதவியை உண்மையில் தேவையுடைய குடும்பங்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வதோடு, மக்களை ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு இயக்கங்களை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *