பினாங்கு, அக். 10 -2025 (வெள்ளி) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Quins Empire Resources நிறுவனம் “மகிழ்ச்சியும் மனஅமைதியும் மிருதந்தது – அந்தகாலமா? இந்தகாலமா?” என்ற தலைப்பில் சிறப்பு பட்டி மன்றம்றத்தை நாளை மாலை பினாங்கு பண்டார் செபராங் ஜெயா, அருள்மிகு கருமாரி அம்மன் கோவிலில் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியை Quins Empire Resources நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜே. சரளாதேவி PJK தலைமையில் நடத்தப்படுகின்றது.
பினாங் மாநில வீடமைப்பு மற்றும் சூழல் ஆணையாளர், பிறாய் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் YB டத்தோஸ்ரீ சுந்தராஜூ சோமு ஆவார். மேலும், பினாங்கு மாநில MIC தலைவர் டத்தோ ஜே. தினகரன் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த பயிற்சிமன்றத்தில் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் டத்துக் டி.பி. விஜேந்திரன், புகழ்பெற்ற வாழ்வியல் பயிற்சியாளர் மற்றும் தமிழ்த் திறனாய்வுக் களத்தில் அறியப்பட்ட முனைவர் S.D. கலைபூதன் (M.A., M.A. (Public Admin), M.Ed., PhD) உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.
ஆசிரியர் மண்னர் மருதை, வழக்கறிஞர் S.P. ஜெயசீலன், டாக்டர் சரளாதேவி PJK (ஆர்கனைஸர்) ஆகியோரும் நிகழ்வை சிறப்பிக்கிறார்கள். மேலும், சங்கீதா இராமகிருஷ்ணன், கார்த்தி மாரி, கேல்வின் சுரேஷ், நித்யா சாகர், முரளி குமார், கவிதா விரமுத்து ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிரவுள்ளனர்.
நாளை சனிக்கிழமை (11.10.2025) மாலை 6.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி, சமூக ஒற்றுமையையும் ஆன்மீக விழிப்புணர்வையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் கோலாலம்பூரில் MIC தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது, அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மனிதவள அமைச்சர், MIC துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்து கொண்டு, வாழ்வில் நேர்மறை சிந்தனை மற்றும் குடும்ப ஒற்றுமையின் அவசியம் குறித்து உரையாற்றினார்.அந்த நிகழ்விற்கு சுமார் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
Dr சரளாதேவி, “கோலாலம்பூரில் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்த பின்னர், பினாங்கு மக்களின் வேண்டுகோளின் பேரில் இந்நிகழ்வை இங்கு நடத்துவது எனக்கு பெருமை. இது சமூகத்திற்குள் நேர்மறை சிந்தனையையும் மனஅமைதியையும் வளர்க்கும் ஒரு முயற்சி,” என்று தெரிவித்தார்.
செய்தி: வீர சின்னையன்














