கிள்ளான், மே 28

இந்திய சமூகத்தினர் தங்களின் உடல்நல பாதுகாப்பிற்காக கட்டாயமாக மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மஇகா தலைவரும் கோத்தா ராஜா தொகுதி தலைவருமான டத்தோ சங்கர் ராஜ் ஐயாங்கர் வலியுறுத்தினார்.
கிள்ளான் தாமான் செந்தோசா குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற இலவச மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதன் மூலம் உயிர் பாதுகாப்பும் மருத்துவச் செலவுக் குறைப்பும் சாத்தியமாகும் என்றார்.
















