முன்னாள் Malaysian Associated Indian Chambers (MAICCI) தலைவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 65

தேதி: 9 மே 2026 | கோலாலம்பூர்

Kenneth Eswaran எனப் பரவலாக அறியப்பட்ட முன்னாள் Malaysian Associated Indian Chambers of Commerce and Industry (MAICCI) தலைவர் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 65.

MAICCI தற்போதைய தலைவர் N Gobalakrishnan வெளியிட்ட தகவலின்படி, கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த எஸ்வரன், இன்று காலை சுமார் 7 மணியளவில் Pantai Hospital Bangsar மருத்துவமனையில் உயிரிழந்தார்.

“மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது,” என கோபாலகிருஷ்ணன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

மறைந்த எஸ்வரனின் இறுதி அஞ்சலி நிகழ்வு திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை அவரது இல்லமான Country Heights, காஜாங்கில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க தலைவராக விளங்கிய கென்னத் எஸ்வரன், 2000 முதல் 2004 வரை MAICCI தலைவராகப் பணியாற்றினார். பின்னர் 2008ஆம் ஆண்டு மீண்டும் தலைமை பொறுப்பேற்று தொடர்ந்து 10 ஆண்டுகள் அமைப்பை வழிநடத்தினார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக சமூக வளர்ச்சிக்காக tireless-ஆக உழைத்த தலைவராக அவர் நினைவுகூரப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *