செகாமட், 13 மார்ச் 2026

Yb யுனேஸ்வரன் ராமராஜ்
நேற்று Polis Diraja Malaysia (PDRM) இன் Ibu Pejabat Polis Daerah Segamat (IPD Segamat) அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயம் மேற்கொண்டார். அவரை Mohd Jumazan Zahir bin Chek Ismail, செகாமட் மாவட்ட காவல் துறைத் தலைவர் வரவேற்றார்.
இந்த சந்திப்பின் போது தற்போதைய பல்வேறு சமூக மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து இருதரப்பும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக மதம், இனம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்கள் அண்மையில் சமூகத்தில் அதிக கவனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவற்றை பொறுப்புடனும் சமநிலையுடனும் கையாள வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் இன ஒற்றுமையும் சமூக அமைதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இருதரப்பும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர். மேலும் செகாமட் மாவட்ட மக்களின் நலன், சமூக பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் சமூகமும், உள்ளூர் தலைவர்களும், காவல் துறையும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலம் செகாமட் மாவட்டம் இன, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் வாழக்கூடிய பாதுகாப்பான பகுதியாக தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மரியாதை சந்திப்பில் செகாமட் மாவட்ட துணை காவல் துறைத் தலைவர் Nantha a/l Muniandy (DSP), மாவட்ட மேலாண்மை பிரிவு தலைவர் Mohd Hafiz bin Mohd Razali (ASP), மற்றும் சிறப்பு பிரிவு தலைவர் Noor Azli bin Yusof (ASP) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் முடிவில், மாவட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் காக்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் Polis Diraja Malaysia மற்றும் குறிப்பாக Ibu Pejabat Polis Daerah Segamat அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு Yuneswaran Ramaraj அவர்கள் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.















