கோலாலம்பூர் | பிப்.5

கோலாலம்பூரில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்ற பத்து மலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கெராக்கான் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட தைப்பூச தண்ணீர் பந்தல் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது..
30 ஆம் தேதி இரவு, ஜாலான் துன் எச். எஸ். லீயிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதம் ஊர்வலமாக புறப்படுவதற்கு முன்னதாகவே, கெராக்கான் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள லெபோ அம்பாங்கில், ரசாக் நகை கடை முன்பாக இந்த தண்ணீர் பந்தல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரத ஊர்வலத்துடன் பத்து மலை நோக்கிச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், சுமார் 10,000 குடிநீர் பாட்டில்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பணியாற்றியமை பொதுமக்களால் பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, வெள்ளி ரத ஊர்வலத்துடன் வந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் டத்தோ ந. சுகுமாரை, கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ், உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் மற்றும் கட்சியின் உயர் அதிகாரி பிரபா ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்றனர்.
மேலும், ரத ஊர்வலத்தின் போது நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் கெராக்கான் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு, தைப்பூச திருநாளின் ஆன்மிகச் சிறப்பை பகிர்ந்துகொண்டனர்.
சமய நிகழ்வுகளுக்கு ஆதரவாகவும், இன நல்லிணக்கம் மற்றும் சமூக சேவையை வலுப்படுத்தும் நோக்கிலும் கெராக்கான் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, இந்த தண்ணீர் பந்தல் ஏற்பாடு மேலும் ஒரு சான்றாக அமைந்தது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.கோலாலம்பூர் | பிப். 5
கோலாலம்பூரில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்ற பத்து மலை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கெராக்கான் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட தைப்பூச தண்ணீர் பந்தல் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இரவு, ஜாலான் துன் எச். எஸ். லீயிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து வெள்ளி ரதம் ஊர்வலமாக புறப்படுவதற்கு முன்னதாகவே, கெராக்கான் கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள லெபோ அம்பாங்கில், ரசாக் நகை கடை முன்பாக இந்த தண்ணீர் பந்தல் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரத ஊர்வலத்துடன் பத்து மலை நோக்கிச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், சுமார் 10,000 குடிநீர் பாட்டில்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பணியாற்றியமை பொதுமக்களால் பாராட்டப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, வெள்ளி ரத ஊர்வலத்துடன் வந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் டத்தோ ந. சுகுமாரை, கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ், உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் மற்றும் கட்சியின் உயர் அதிகாரி பிரபா ஆகியோர் இன்முகத்துடன் வரவேற்றனர்.
மேலும், ரத ஊர்வலத்தின் போது நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் கெராக்கான் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு, தைப்பூச திருநாளின் ஆன்மிகச் சிறப்பை பகிர்ந்துகொண்டனர்.
சமய நிகழ்வுகளுக்கு ஆதரவாகவும், இன நல்லிணக்கம் மற்றும் சமூக சேவையை வலுப்படுத்தும் நோக்கிலும் கெராக்கான் கட்சி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக, இந்த தண்ணீர் பந்தல் ஏற்பாடு மேலும் ஒரு சான்றாக அமைந்தது என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.