போர்ட்டிக்சன், ஜனவரி 26 –

பிரபல சினிமா பின்னணி பாடகர் கிரிஷ் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது,, கிரிஷ் இசை இரவு.
இசை நிகழ்ச்சி – நெகிரி செம்பிலான்.
இதுகுறித்து போர்ட்டிக்சன் பாயு பிச் விடுதியில் ஏற்பாட்டு குழுத் தலைவி சுமதி தலைமையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த இசை நிகழ்ச்சி, சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் அரினா ஐஆர்சி விளையாட்டு திறந்த வெளி மைதானத்தில், வரும் மே 2 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பாடகர் கிரிஷ் மட்டுமின்றி, மேலும் பல முன்னணி பாடகர்கள் மற்றும் கலைஞர்களும் கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முதல் முறையாக நடைபெறும் பாடகர் கிரிஷ் இசை நிகழ்ச்சிக்கு, நாடு முழுவதிலும் இருந்து 6000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக, விளையாட்டு மன்றத்தின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரகு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு உபகரணங்கள், பயிற்சி திட்டங்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், மாநில கல்வி இலக்காவின் ஆரம்ப பாலர் பள்ளி இணை இயக்குநர் ஜெயபாலன், சமூக ஆர்வலர் ஷாம் பிரசாத் உள்ளிட்ட பல்வேறு கல்வி, சமூக மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வியுடன் இணைந்து விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்குவதற்கு இத்தகைய முயற்சிகள் பெரும் ஊக்கமாக அமையும் என கருத்து தெரிவித்தனர்.















