MSPAN விருது உண்மையிலேயே மிகுந்த பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியது.

பல கலைஞர்களின் திறமைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும், சமூகத்திற்கு நலம் தரும் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வரும் நற்பண்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய மரியாதையும் பெருமையும் சேர்க்கும் வகையிலும் பல சிறப்பான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வரும் மக்கள் ஓசை அன்பா அவர்கள் வழங்கி வரும் MSPAN விருது உண்மையிலேயே மிகுந்த பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியது.

இந்தப் பாராட்டுக்குரிய முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று சிறந்த பாடகியும், கல்வியிலும் கலையிலும் தனித்தன்மை கொண்டவருமான டாக்டர் வனிதா முத்துக்குமார் அவர்களுக்கு “சேவைத் திலகம்” என்ற மதிப்புமிக்க விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தருகிறது.

இசைத்துறையில் தனது இனிய குரலாலும், சமூக சேவையில் தனது அர்ப்பணிப்பாலும் பலருக்கும் ஊக்கமாக விளங்கி வரும் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது முற்றிலும் பொருத்தமானதும் நியாயமானதுமாகும்.

 

இந்த உயரிய அங்கீகாரம், அவர்களின் இதுவரை செய்த சேவைகளுக்கான மரியாதையாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டிய ஒரு ஊக்கமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டாக்டர் வனிதா முத்துக்குமார் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மனமார தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் கலைப்பணி, சேவைப் பயணம் மேலும் பல விருதுகளாலும் சாதனைகளாலும் அலங்கரிக்கப்பட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *