தமிழ் மொழிக் கல்வி கருத்தரங்கு, சிலாங்கூர் மாநிலக் கல்வித்துறை ஏற்பாட்டில், 4 & 5 டிசம்பர் 2025 தேதிகளில் செந்தூல் காலெக்சி பென்குவிட் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கருத்தரங்கின் நிறைவு விழா மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களால் நிறைவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக ஓய்வு பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டும் கவுரவமும் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த திரு. செங்குட்டுவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ப் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்காக அவர் எப்போதும் முன்னோக்குப் பார்வையுடன் அர்த்தமுள்ள, முன்னேற்றமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருவது பாராட்டத்தக்கது.















