மலேசியாவில் தேசிய உறுமி மேலம் மற்றும் குறும் நாடகப் போட்டி – 2025 சிறப்பாக நடந்தது.

World Tamil Organisation நன்கு அறிந்த நிகழ்வு ஏற்பாட்டாளர் தலைவர் டாக்டர் இருதியம் செபாஸ்டியார் அவரது பிரமாண்ட துவக்கவிழா. மலேசிய இந்திய மாணவர்கள், இளைஞர்கள் படைப்பு உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும்!

பெராக்  நவம்பர் 25 –மலேசியாவில் தமிழக கலாச்சாரக் கலைப்பாரம்பரியத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற தேசிய உறுமி மேலம் போட்டி – மலேசியா 2025 மற்றும் குறும் நாடகப் போட்டி – மலேசியா 2025 இன்று மிகுந்த செம்மையிலும், உற்சாகத்திலும் துவங்கியது. இந்த பெருமைமிகு விழாவை World Tamil Organisation தலைவர் டாக்டர் இருதியம் செபாஸ்டியார் அவர்கள் நேரில் முன்னிலை வகித்து நடத்தினார்.

மலேசியா அரசு கலை & கலாச்சாரம், மலேசியா உறுமி கலைக்கூட்டம், ராஜ் டிவி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழா ராவங் செல்வப்பா இவெண்ட் ஹாலில் நடைபெற்றது. தமிழர் பண்பாட்டு வளர்ச்சியை உலக மேடையில் பிரதிபலிக்கும் முக்கிய நிகழ்வாக இது திகழ்கிறது. இரு நாட்கள் (24 & 25 நவம்பர் 2025) நடைபெறும் இந்தப் போட்டி, இளம் கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் தமிழர் பாரம்பரியக் கலைகளை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு வலுவான தளமாக அமைகிறது.

விழா சிறப்புரையுடன் தொடக்கம்
உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் தியாக. இலங்கோவன் அவர்கள் சிறப்பு உரையாற்றி விழாவைத் தொடக்கினார்.
ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க்கின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எம். ரவீந்திரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கலைஞர்களுக்கு ஊக்கமளித்தார்.
மலேசிய உறுமி கலைக்கூட்டத் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய அநந்தசாமி அவர்கள் சிறப்புரையாற்றி, இளம் திறமைசாலிகளை பாராட்டினார்.

சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி
இந்த விழாவின் பிரதான சிறப்பாக, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த முக்கியப் பிரமுகர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டனர். கலை, கல்வி, சமூக சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு World Tamil Organisation சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

கலைகளைக் காக்கும் பெரும்பரிவு
மலேசியாவின் பல மாநிலங்களில் இருந்து அணிகள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளன. உறுமி மேளம் மற்றும் குறும் நாடகம் ஆகிய இரண்டு போட்டிகளும் தமிழர் மரபுக் கலைகளை புதுமையாகவும், உயர்வாகவும் உலக அரங்கில் நிலைநிறுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றன.

அமைப்பாளர்கள் தெரிவித்ததாவது:
“இளம் தலைமுறையின் திறமைகளை வெளிக்கொணரும் இந்தப் போட்டி, மலேசிய தமிழர் கலாச்சார வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகப் பதியும்.”

முடிவு & விருதுகள்
இரு நாள் போட்டியின் இறுதியில், வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் விருதுகள் மற்றும் அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *