கோரத்தாண்டவமாடும் சென்யார் புயல்- மலேசியாவில் முதல் மரணம் பதிவு

கோரத்தாண்டவமாடும் சென்யார் புயல்- மலேசியாவில் முதல் மரணம் பதிவு

மலாக்கா, நவ 28- 2025

சென்யார் புயல் காரணமாக மலேசியாவில் முதல் மரணம் பதிவு செய்யப்பட்டது. இன்று அதிகாலை முறிந்து விழுந்த மரத்தின் மீது மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒருவர் உயிரிழந்ததன் மூலம் இந்த புயல் முதல் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம் இன்று காலை 6.57 மணியளவில் மலாக்காவில், Machap-ஐ நோக்கிச் செல்லும் Jalan Selandar-இல் பதிவானதாக, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைமை இயக்குநர் டத்தோஶ்ரீ நோர் ஹிஷாம் முஹம்மட் கூறினார்.

 

“இந்த மரணம் சென்யார் வெப்பமண்டல புயலின் நேரடி விளைவு அல்ல என்றாலும், அது நிச்சயமாக புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட அபாயகரமான சூழ்நிலையால் நிகழ்ந்ததாகும்.

 

காற்றின் வேகம் குறைந்தாலும், தொடர்ந்து பெய்த மழையால் மண் மென்மையடைந்துள்ளதால், மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் நிலச்சரிவு அபாயம் இன்னும் அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *