மலேஷியாவில் பாரதநாட்டிய கலைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

தேதி : 19.11.2025

மலேஷியாவில் பாரதநாட்டிய கலைஞர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

பெராக் மாநிலம் கிண்டா மாவட்டத்தை சேர்ந்த Persatuan Pengiat Seni Kinta Daerah Perak அமைப்பின் நிறுவனர் திரு. கணி அரசு அவர்களால் வழங்கப்படும் புகழ்பெற்ற “நாட்டிய லஹரி – கிரிஸ்டல் அவார்டு”  தற்போது பதிவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மலேஷியாவில் பாரதநாட்டிய துறையில் செயற்படும் ஆசிரியர்கள், நடன மாஸ்டர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த விருதிற்கான பதிவில் கலந்து கொள்ளவும் அழைக்கப்படுகின்றனர். பாரதநாட்டிய கலை வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த விருது, கலைஞர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கலாச்சாரப் பரவலுக்கு பெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏதேனும் தகவல்கள், சேர்க்கை பற்றிய விவரங்கள் அல்லது தேவைகளுக்காக கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளலாம்:

📞 011-3600 5231 (ARK)

இந்த நிகழ்ச்சிக்கு Malaysia Kalai Ulagam மற்றும் Naan Oru Malaysian ஆகியவற்றின் ஊடக ஆதரவு வழங்கப்படுகிறது.

மலேஷிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய கலைகளின் வளர்ச்சியை முன்னெடுத்து, பாரதநாட்டிய கலைஞர்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த முயற்சியில் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *