2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

கோலாலம்பூர், அக்.10

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50 விழுக்காடு டோல் கட்டண கழிவு இரண்டு நாட்களுக்கு வழங்கப்படும். இந்த சலுகை, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும் என பிரதமர் தெரிவித்தார்.

“மலேசியாவின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகை காலத்தில், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக ஒன்று சேரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று பிரதமர் கூறினார்.

இந்த அறிவிப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகமாக வரவேற்று கரவொலி எழுப்பினர்.

மலேசிய இந்தியர்கள் தீபாவளியை அக்டோபர் 20ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடவுள்ள நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானம் போக்குவரத்து செலவை குறைக்கும் வகையில் பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டோல் கழிவு அறிவிப்பு, மடாணி அரசாங்கத்தின் மக்கள் நலக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *