கூலிம் “Colours Of India” கேளிக்கை சந்தை – மக்களின் பெரும் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது

கூலிம் நகரின் CRC சீன மண்டபத்தில் அக்டோபர் 1 முதல் 5 வரை நடைபெற்ற “Colours Of India” எனும் கேளிக்கை வர்த்தக சந்தை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இந்திய வர்த்தகக் கண்காட்சியில் பலவிதமான நிலையான பொருட்கள், அழகு சாதனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் தீபாவளிக்கான பலகாரங்கள் என நுகர்வோருக்குத் தேவையான அனைத்தும் விற்பனைக்குக் கிடைத்தன.

புதிய தலைமுறையினர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த கண்காட்சி, கூலிம் மக்களுக்கு ஒரு புதுமையான வர்த்தக அனுபவத்தை வழங்கியது.

அதே நேரத்தில், Elite Super Star Group (IQI Realty Sdn. Bhd) நிறுவன இளைஞர்கள் வீட்டுவாசல் துறையில் நாட்டுமுழுவதும் மக்களுக்கு வீடுகள் வாங்கும் வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். அவர்கள் தற்போது மலேசிய அளவில் வீட்டு வாங்குதல் துறையில் முன்னணி சாதனையாளர்களாக திகழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியில் மக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்தது என்றும், விற்பனையும் எதிர்பார்ப்பை மீறி சிறப்பாக அமைந்ததாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வரும் ஆண்டுகளில் Elite Super Star Group அமைப்பு இதுபோன்ற கேளிக்கை மற்றும் வர்த்தக சந்தைகளை நாடு தழுவிய அளவில் நடத்தும் திட்டத்தில் இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளரான திரு குகன் பிரபா தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *