16ஆவது சபா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது: முதலமைச்சர் ஹஜிஜி நோர் அறிவிப்பு 

16ஆவது சபா மாநில சட்டமன்றம் இன்று கலைக்கப்படுகிறது: முதலமைச்சர் ஹஜிஜி நோர் அறிவிப்பு

கோத்தா கினாபாலு: 06.10.2025

சபா மாநிலத்தின் முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜிஜி நூர், இன்று திங்கட்கிழமை சபா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன் மூலம் சபா மாநிலத்தின் 17வது பொதுத் தேர்தலுக்கு வழி பிறந்துள்ளது.

 

கோத்தா கினபாலுவில் உள்ள மெனாரா கினபாலுவில் நடந்த மாநில அரசாங்கத்தின் கெளரவ உறுப்பினர்களுடனான சந்திப்பை அடுத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

முன்னதாக, மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலைப் பெறுவதற்காக, முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அவர்கள், இன்று காலை இஸ்தானா ஸ்ரீ கினபாலுவில் மாநில ஆளுநரான துன் மூசா அமான் அவர்களைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் துன் மூசாவின் ஒப்புதலுக்குப் பிறகு, சட்டமன்றம் கலைக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *