கோலாலம்பூர், 24 செப்டம்பர் –

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் (MOTAC) தலைமையில், 12 முதல் 16 செப்டம்பர் வரை தாமன் தாசிக் திதிவாங்சாவில் நடைபெற்ற மலேசியா கலாச்சார விழா 2025 – பெஸ்டா கொண்டாட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பெர்டுபுகான் கலை மற்றும் கலாச்சார SRFA அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநர் நளினி ரதக்ரிஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 70-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், சாதனை முயற்சிகள், கலை நிகழ்வுகள், ஃபேஷன் அணிவகுப்புகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஐந்து நாட்களில் 50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த விழாவில் MBR மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைகள் பதியப்பட்டன. அவற்றில் சில:
4,653 பேர் பங்கேற்ற மலேசியாவின் மிகப்பெரிய கோலாட்டம்
14 மாநிலங்களை இணைத்த உருமி மெளம் ஒருங்கிணைந்த நிகழ்ச்சி
55 அடி x 35 அடி அளவில் மலேசியா மதானி லோகோ கொலமும்


மேலும், வீரம் சிலம்பம் சர்வதேச சாம்பியன்ஷிப் 2025, ஆர்ட் ஆஃப் ஹார்மனி ஓவியப் போட்டி, வண்ணமயமான ஹோலி திருவிழா, புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் கச்சேரி மற்றும் பாரம்பரிய உடை அணிவகுப்புகள் அனைத்தும் மக்களின் மனதில் அழியாத அனுபவமாக பதிந்தன.
இறுதிநாளில் நடைபெற்ற கொண்டாட்டம் விருதுகள் விழா 2025-இல் 50 சிறப்புப் பங்காளிகள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழா, “பல்துறை கலாச்சாரத்தில் ஒற்றுமை” எனும் செய்தியை வலியுறுத்தியதோடு, இந்திய மரபுகளை மலேசியாவின் தேசிய அடையாளத்தில் பெருமையுடன் நிலைநிறுத்தியது.
பெஸ்டா கொண்டாட்டம் – சாதனைகளும், ஒற்றுமையும் கலந்த மறக்கமுடியாத விழா!
News By Naan Oru Malaysian















