சன்ஷைன் கிட்ஸ் செப்டம்பர் 22. 2025 – கல்வியை மாற்றும் புதிய முனைப்புடன்!

போர்ட் டிக்சனில் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட Sunshine Kids பள்ளி, இன்று 400க்கும் மேற்பட்ட சிறார்களை உருவாக்கி, எதிர்கால குடிமக்களை உருவாக்கும் கல்வி மையமாக வளர்ந்து வருகிறது.
டாக்டர் ஆர்.வி. ஷ்யாம் பிரசாத் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி மணோகரன் ஆகியோர் இணைந்து நிறுவிய இந்தப் பள்ளி, விளையாட்டு முறை, மான்டிசோரி கோட்பாடுகள், STEAM (Science, Technology, Engineering, Arts & Mathematics) மற்றும் தொழில் முனைவுத் திறன்களை (Entrepreneurial Thinking) இணைத்து, சிறுவயதில் இருந்தே படைப்பாற்றலும் தலைமைத்துவ குணங்களும் வளர்க்கிறது.
“நாங்கள் புத்தகப் புழுக்களை மட்டும் உருவாக்க விரும்பவில்லை. எதிர்கால குடிமக்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம். உலகிற்கு திறன் சார்ந்த மனிதர்கள் தேவை,” என டாக்டர் ஷ்யாம் தெரிவித்தார்.
சன்ஷைன் கிட்ஸ் பள்ளியில் கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவுக்கு அப்பாற்பட்டது. கணிதம், அறிவியல், கலை, மொழிகள் மட்டுமின்றி மதிப்புகள், அபாகஸ், தொடர்புத்திறன், பொதுப்பேச்சு போன்றவையும் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. நான்கு வயதிலிருந்தே மாணவர்கள் தமிழ், மந்திரின், மலாய் மொழிகளோடு இஸ்லாமிய பாடங்களையும் கற்றுக் கொள்கிறார்கள்.
அதன் விளைவாக, சன்ஷைன் மாணவர்கள் எந்தப் பள்ளியில் சேர்ந்தாலும் சாதனையாளர்களாக திகழ்கின்றனர். இவர்களின் தனிப்பட்ட காப்புரிமை பெற்ற பாடத்திட்டம், பாடநூல்கள் மற்றும் செயல்பாட்டு புத்தகங்கள் கல்வித் தரத்தை உயர்த்துகின்றன.
இந்த முயற்சிக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் (அப்போது போர்ட் டிக்சன் எம்.பி.) தலைமையகத்தைத் திறந்து வைத்து பாராட்டுத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது போர்ட் டிக்சன், தெலுக் கேமாங், செரம்பன் 2, ஃபாரஸ்ட் ஹைட்ஸ் (செனாவாங்) ஆகிய இடங்களில் கிளைகள் இயங்குகின்றன. இந்த மாதம் மெலாக்கா இன்டர்நேஷனல் ஸ்கூலில் புதிய கிளை திறக்கப்பட உள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன் Sunshine Kids தனது பிராஞ்சைஸ் உரிமத்தைப் பெற்றுள்ளது. கல்வியை நேசிக்கும் யாரும் இந்தப் பிராஞ்சைஸில் இணைந்து பள்ளிகளைத் தொடங்கலாம் என நிறுவனர் தெரிவித்தார். ஆசிரியர் பயிற்சி, சந்தைப்படுத்தல், அனுமதி, அன்றாட மேலாண்மை என முழுமையான வழிகாட்டுதலையும் சன்ஷைன் வழங்குகிறது.
எதிர்காலத்தில் தனியார் மற்றும் பன்னாட்டு பள்ளிகள், மேலும் பல்கலைக்கழகம் தொடங்கும் கனவையும் ஷ்யாம் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தியாவில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளதோடு, இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் விரிவாக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
“கல்வியே உலகத்தை மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம்” என்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றைத் தனது வாழ்வியல் நோக்கமாகக் கொண்டிருப்பதாக ஷ்யாம் வலியுறுத்தினார்.
✨ Sunshine Kids – ஒவ்வொரு குழந்தையும் ஒளிரும் மேடை! ✨
photo from FMT Lifestyle















