தேதி: 1 செப்டம்பர் 2025
WTCO தலைவர் டத்தோ’ டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கிளாங்-இல் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்
கிளாங்– உலக திருக்குறள் கலாசார அமைப்பின் (*WTCO*) தலைவர் டத்தோ’ டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்கள், 1 செப்டம்பர் 2025 , தெ எஸ்டெல்லா ஹோட்டல், கிளாங் – இல் முக்கிய செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
இந்த நிகழ்வில், உலகளாவிய தமிழர் சமூகத்தில் *திருக்குறளின்* நெறிமுறைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் WTCO மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் விரிவாக பேசினார்.

தமிழ் இலக்கியத்தின் வழியாக மாணவர்களுக்கு ஒழுக்கமும் அறவாழ்க்கை மதிப்புகளும் விதைக்கப்படும் வகையில் புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள், சமூக தலைவர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு ஆதரவை தெரிவித்தனர். நிகழ்ச்சி, தமிழ் பண்பாட்டையும், இலக்கியத் தொன்மையையும் உலகளவில் பரப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதை கொண்டு நிறைவடைந்தது.















