20.10.2026
நம் நாட்டில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக
GOON அனைத்துலக கல்லூரியின்
தலைமை இயக்குநர் பிரபாகரன் பெருமாள் இதனை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
மலேசிய மாணவர்கள் கால்நடை மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கூன் அனைத்துலக கல்லூரி, இந்தோனேசியாவின் ஐபிபி பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி ஒத்துழைப்பை முன்னெடுத்துள்ளது.
இந்த ஒத்துழைப்பின் மூலம், கால்நடை மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை மலேசிய மாணவர்களுக்கு வழங்குவதுடன், வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான தடைகளையும் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 2027ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக கூன் அனைத்துலக கல்லூரி மொத்தம் 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கல்வி உதவித் தொகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த உதவித்தொகைகள், அறிவியல் அடிப்படையிலான அடிப்படை அறிவியல் பாடத்திட்டத்திற்குத் தகுதி பெறும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, சபா, சரவா மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மலேசியாவில் கால்நடை மருத்துவக் கல்விக்கான இடங்கள் குறைவாக இருப்பதால், மாணவர்கள் இத்துறையில் கல்வி கற்பதற்கான மாற்று வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் எனக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2027ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கூன் அனைத்துலக கல்லூரியில் தொடங்கியுள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஐபிபி பல்கலைக்கழகத்தின் கல்வித் தகுதிகள், தேர்வு நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் இந்தக் கல்வி ஒத்துழைப்புக்கு ஆதரவு வழங்கிய ஐபிபி பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரபாகரன் கூறினார்.















