22.04.2025

அண்மையில் சிரம்பான் ஸ்ரீ மஹா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தானம் ஆலயத்தில் நடைபெற்ற பள்ளியறை பூஜை மிகவும் பக்தி உணர்வோடு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆன்மீக நிகழ்வில் மலேசிய இந்து சங்கம் தேசிய தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன், தேசிய கெளரவ செயலாளர் தொண்டர்மணி கணாமூர்த்தி, தேசிய கௌரவ பொருளாளர் தொண்டர்மாமணி இரா.பெருமாள், தேசிய துணைப் பொருளாளர் விவேக ரத்னா விஜய பாஸ்கர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில இந்து சங்க தலைவர் சங்கபூஷன் ஆனந்த் கோபி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த ஆலயம், சைவ ஆகம முறைகளை முறையாகக் கடைப்பிடித்து தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகளை மிகுந்த ஒழுங்கும் பக்தியுமுடன் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தத் தலம், மற்ற ஆலயங்களுக்கு உண்மையிலேயே ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
இத்தகைய உயர்ந்த பணிகளை தொடர்ந்து சிறப்பாக மேற்கொண்டு வரும் தேவஸ்தான நிர்வாகத்தினருக்கும் அர்ச்சகர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகும். அவர்கள் செய்யும் இந்த சேவை, சமுதாயத்தின் ஆன்மிக ஒற்றுமையையும் பாரம்பரிய மதிப்புகளையும் உறுதிப்படுத்துகிறது.
இன்னும் பல ஆண்டுகள் இந்த ஆலயம் இவ்வாறே செழித்து, பக்தர்களுக்கு ஆன்மிக ஒளியை பரப்பட்டும் என்று மனமார்ந்த வாழ்த்துக்கள்! .














