மலேசியத் தமிழர் சமூக – பண்பாட்டு நட்புறவுப் பயணம் சென்னையில் இனிதே தொடக்கம்

சென்னை, ஆகஸ்ட் 13, 2026

மலேசியத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான சமூக, பண்பாட்டு மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலேசியத் தமிழர் சமூக – பண்பாட்டு நட்புறவுப் பயணம் இன்று சென்னையில் சிறப்பாகத் தொடங்கியது.

டத்தோ கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி. மணிவாசகம் தலைமையில் மலேசியாவிலிருந்து வந்த தமிழர் பேராளர்கள் குழு இன்று காலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது. அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்தப் பயணம் மலேசியா – இந்தியா, குறிப்பாக தமிழகம் – மலேசியத் தமிழர்கள் இடையிலான தொப்புள் கொடி உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் ரூக்குன் தெத்தாங்கா தலைவர் ஸ்டார் மணியம், பிரபல கவிஞர் சீராகி உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் பேராளர்கள் இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

பயணக் குழுவில் ஸ்டார் மணியம், ராதாகிருஷ்ணன், ராஜீவ் குமார், லாவண்யா, ஜீவானந்தன், மலர்விழி, ராஜேந்திரன், ராமசாமி சங்கர், ராயன் ரவி, முனிசாமி, பாஸ்கரன், கிருஷ்ணன், டாக்டர் கருப்பன் பிள்ளை, முனியாண்டி, கரூர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துவதுடன், இரு தரப்பினருக்கும் இடையே எதிர்காலத்தில் மேலும் பல சமூக மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளையும் இந்தப் பயணம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தை சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை செய்த பிரியா டிராவல்ஸ் இயக்குநர் பிரியா குமாரி, அவரது உதவியாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

மலேசியத் தமிழர்களின் சமூகப் பங்களிப்பு, பண்பாட்டு அடையாளம் மற்றும் தமிழகத்துடனான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் இந்த நட்புறவுப் பயணம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய MKU Malaysia Kalai Ulagam மற்றும் Naan Oru Malaysian Online Media சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்.

“தமிழகம் – மலேசியா: உறவு தொடரட்டும், நட்பு வளரட்டும், பண்பாடு சிறக்கட்டும்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *