மித்ரா எஃப்சி வரலாற்றுச் சாதனை – முதல் முறையாக எஸ்.ஜே.கே.டி. மாணவர்கள் சர்வதேச கால்பந்து போட்டிக்காக சீனா பயணம்

13 ஜூலை 2026

கோலாலம்பூர், ஜூலை 13: மலேசிய இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் பதிவு செய்யும் வகையில், மித்ரா எஃப்சி (Mithraa FC) தலைவர் திரு. டி. சரஸ்குமார் தலைமையிலான அணி, முதன்முறையாக எஸ்.ஜே.கே.டி. (SJKT) பள்ளி மாணவர்களை சீனாவில் நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்கிறது.

இது ஒரு சாதாரண வெளிநாட்டு பயணம் அல்ல; மாறாக, தமிழ் பள்ளி மாணவர்களின் திறமைகளை உலக அரங்கில் வெளிப்படுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இளம் வீரர்களுக்கு சர்வதேச அனுபவம், தொழில்முறை விளையாட்டு கலாசாரம் மற்றும் உலகத் தரத்திலான போட்டி அனுபவத்தை வழங்கும் இந்த முயற்சி, அவர்களின் எதிர்கால விளையாட்டு வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக அமையும்.

இந்த அரிய வாய்ப்பை உருவாக்கிய மித்ரா எஃப்சி தலைவர் திரு. டி. சரஸ்குமார் மற்றும் அவரது அர்ப்பணிப்புமிக்க அணியினருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“கனவுகளுக்கு எல்லைகள் இல்லை. உலக அரங்கில் மலேசியாவின் பெயரை உயர்த்தும் இந்த இளம் வீரர்கள் சிறந்த அனுபவங்களையும் மறக்க முடியாத நினைவுகளையும் பெற்று வெற்றியுடன் தாயகம் திரும்ப வாழ்த்துகள்,” என பலரும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

NAAN ORU MALAYSIAN ONLINE MEDIA சார்பில், மித்ரா எஃப்சி தலைவர் திரு. டி. சரஸ்குமார், பயிற்சியாளர்கள், அணியினர் மற்றும் சீனாவிற்கு பயணிக்கும் அனைத்து இளம் கால்பந்து வீரர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

மலேசியாவின் பெருமையை உலக மேடையில் பறைசாற்றி வெற்றியுடன் தாயகம் திரும்ப வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *