7 ஜூன் 2026

AIMST பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் சிறப்பு பணிப்பயணம் RM25 மில்லியன் அரசாங்க மானியம் வழங்கப்பட்டது
பெடோங், கெடா – மலேசிய இந்திய கல்வி மேம்பாட்டிற்கும் உயர்கல்வி வளர்ச்சிக்கும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவின் வெளிப்பாடாக, மலேசிய பிரதமர் யாப் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இன்று AIMST பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு பணிப்பயணம் மேற்கொண்டார்.


மலேசிய இந்திய கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை (MIED) நிர்வாக சபை உறுப்பினர் என்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்தில், உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸம்ப்ரி அப்துல் காதிர் அவர்களும் கலந்து கொண்டார்.
பிரதமரின் வருகையை AIMST பல்கலைக்கழகத்தின் வேந்தரும் MIED தலைவர் மன்றத்தின் தலைவருமான டான் ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்கள் அன்புடன் வரவேற்றார். அவருடன் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும் ம.இ.கா. துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் அவர்களும் இணைந்திருந்தார்.
இந்த வருகை, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் வகிக்கும் முக்கிய பங்கிற்கும், குறிப்பாக AIMST பல்கலைக்கழகமும் MIED அமைப்பும் தரமான கல்வியை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் வழங்கும் நோக்கில் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான பணிகளுக்கும் அரசாங்கம் அளித்து வரும் அங்கீகாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.


இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, AIMST பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசாங்க மானியமாக RM25 மில்லியன் நிதியை பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
இந்த நிதியுதவி, கல்வி தரத்தை மேலும் உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், புதுமையான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், எதிர்கால தலைமுறைகளை திறனுள்ள மனிதவளமாக உருவாக்கவும் பெரிதும் உதவும் எனக் கருதப்படுகிறது.
AIMST பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள்முதல் இந்திய சமுதாயத்தினரையும் உட்பட அனைத்து இன மாணவர்களுக்கும் தரமான உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இன்று நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

NO SALES; NO ARCHIVE; RESTRICTED TO EDITORIAL USE ONLY. NOTE TO EDITORS: This handout videos may only be used for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the visual or facts mentioned in the caption. Reuse of the videos may require further perm

NO SALES; NO ARCHIVE; RESTRICTED TO EDITORIAL USE ONLY. NOTE TO EDITORS: This handout videos may only be used for editorial reporting purposes for the contemporaneous illustration of events, things or the people in the visual or facts mentioned in the caption. Reuse of the videos may require further perm
அரசாங்கம், MIED மற்றும் AIMST பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு, நாட்டின் உயர்கல்வித் துறையை மேலும் வலுப்படுத்துவதோடு, இளம் தலைமுறையினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என நிகழ்வில் பங்கேற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த அர்த்தமுள்ள வருகை, கல்வி மூலம் சமூக முன்னேற்றத்தை உருவாக்கும் AIMST பல்கலைக்கழகத்தின் இலக்கை மேலும் வலுப்படுத்தியதோடு, நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியது..
Photo Anwar















