பெற்றோரின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்ற மீரா ஷ்ரீயின் கலை நிகழ்வு

31 மே 2026 |

பெற்றோரின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்ற மீரா ஷ்ரீயின் கலை நிகழ்வு

மலேசிய கலை உலகம் (MKU Malaysia Kalai Ulagam) மற்றும் “நான் ஒரு மலேசியன்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்புக் கலை நிகழ்ச்சி, பெற்றோர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் உற்சாகமான பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் மற்றும் மாணவர்களின் திறமைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக, நிகழ்ச்சியின் மையப் பொறுப்பை வகித்த மீரா ஷ்ரீ, பெற்றோர்களின் எதிர்பாராத அளவிலான ஆதரவு மற்றும் ஊக்கத்தால் மிகவும் நெகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்கள் வழங்கிய ஒத்துழைப்பு, வாழ்த்துச் செய்திகள் மற்றும் அரங்கில் வெளிப்படுத்திய உற்சாகமான ஆதரவு ஆகியவை நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதற்காக அனைத்து பெற்றோர்களுக்கும் மீரா ஷ்ரீ தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

மேலும், பிரபல இசையமைப்பாளர் ஜெய் அவர்கள், கடைசி நேர அழைப்பை ஏற்று தனது பிஸியான பணிநேரத்திலும் கலந்து கொண்டு நடுவராகச் செயல்பட்டது நிகழ்விற்கு பெருமை சேர்த்தது. அவரது வருகையும் ஆதரவும் நிகழ்ச்சி குழுவினரால் பெரிதும் பாராட்டப்பட்டது.

அத்துடன், சா ரே கா மா பா புகழ் நட்சத்திரங்களான அருளினி மற்றும் ஹேமித்ரா ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்தது. அவர்களின் வருகை மாணவர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்தது.

நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. வினோத் முரளி அவர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

நிகழ்வின் நிறைவில் பேசிய மீரா ஷ்ரீ, “பெற்றோர்களின் ஆதரவே எனது மிகப்பெரிய பலம். நீங்கள் வழங்கிய ஊக்கமும் நம்பிக்கையும் என்னை மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. இந்த வெற்றியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து பெற்றோர்கள், விருந்தினர்கள், கலைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் மலேசிய கலை உலகம் (MKU) மற்றும் ‘நான் ஒரு மலேசியன்’ அமைப்பினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *