கோலாலம்பூரில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் – மைஃபேமிலி 15ஆம் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்

கோலாலம்பூர், மே 14, 2026

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் Vels University நிறுவனரும் வேந்தருமானதுடன், தமிழ் திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளருமான Dr. Ishari K. Ganesh அவர்கள், சீனாவில் நடைபெற்ற வர்த்தகப் பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பும் வழியில், இன்று கோலாலம்பூரில் தங்கியிருந்தார்.
அவரை, மலேசியாவில் சமூக மற்றும் மனிதநேயப் பணிகளில் ஈடுபட்டு வரும் “மைஃபேமிலி” அமைப்பின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் K.A. Guna அவர்கள் நேரில் சந்தித்து,

எதிர்வரும் ஆகஸ்ட் 9, 2026 அன்று நடைபெறவிருக்கும் “மைஃபேமிலி” 15ஆம் ஆண்டு நிறைவு விழாவும் நிதி திரட்டும் பிரமாண்ட விருந்து நிகழ்ச்சிக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பிதழை வழங்கினார்.
இந்த நிகழ்வில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார். கல்வி, சமூக சேவை மற்றும் திரைப்படத் துறைகளில் அவரது பங்களிப்பு, இந்நிகழ்விற்கு மேலும் பெருமை சேர்க்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இவ்விழாவிற்கு M. Saravanan தலைமையேற்கிறார். அவர் ம.இ.கா தேசிய துணைத்தலைவராகவும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேவேளை, முன்னாள் செனட்டரான Dato’ T. Mohan அவர்கள் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்ளவுள்ளார்.
சமூக நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாபெரும் விழாவில், மலேசியா மற்றும் இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மைஃபேமிலி” அமைப்பின் 15 ஆண்டுகால சமூகப் பயணத்தை கொண்டாடும் இந்த விழா, மலேசிய தமிழ் சமூகத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும் என்றும் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *