வடக்கு மண்டல இந்திய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற “Astro Vanavil Rasigar Mandram Icon Awards 2026” விருது வழங்கும் விழா, “AVRM மலாம்அனுகர மடானி”

தேதி: 5 ஏப்ரல் 2026

சுங்கை பெட்டானி, கெடா:

வடக்கு மண்டல இந்திய கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற “Astro Vanavil Rasigar Mandram Icon Awards 2026” விருது வழங்கும் விழா, “AVRM மலாம்அனுகர மடானி” நிகழ்வின் கீழ், கெடாவின் சுங்கை பெட்டானியில் உள்ள ஹோட்டல் ஜெராய் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், “Star of Telecast” பிரிவில் “Kalaiyulaga Kalaimagan” விருதை டாக்டர் எம்.ஏ. லிங்கேஸ்வரன் மணியம் பெற்றார். இவ்விருது அவரின் கலைப்பணிகளுக்கான அங்கீகாரமாகவும், தொலைக்காட்சி துறையில் அவர் வழங்கிய சிறப்பான பங்களிப்பிற்குமான பாராட்டாகவும் வழங்கப்பட்டது.

விருதைப் பெற்ற பின்னர் உரையாற்றிய அவர், “இந்த அங்கீகாரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது என் கலைப் பயணத்தில் மேலும் முன்னேறுவதற்கான ஊக்கமாக இருக்கும். என்னை நேசித்து ஆதரித்து ஆசீர்வதித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் பயணம் தொடர்ந்து செல்லும்,” என்று தெரிவித்தார்.

மேலும், தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்,

“நாயிற்கடையாய்க் கிடந்த அடியேனுக்கு, தாயிற் சிறந்த தயாவான தத்துவன் அருளியது…”

என்ற வரிகளை மேற்கோள் காட்டி, தாழ்மையுடன் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வு வடக்கு மண்டல இந்திய கலைஞர்களின் சாதனைகளை கொண்டாடும் முக்கியமான மேடையாக விளங்கியது. பல்வேறு கலைத்துறைகளில் சாதனை படைத்த கலைஞர்கள் கலந்து கொண்டு, கலை வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *