மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்துலக தமிழர் சித்தர் மரபு மாநாடு; மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது

மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்துலக தமிழர் சித்தர் மரபு மாநாடு; மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது

கோலாலம்பூர், பிப் 6-


அனைத்துலகத் தமிழர் சித்தர் மரபு மாநாடு 3 நாட்களுக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் சில்லாழி கந்தசாமி கூறினார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாடு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தொடங்கி மார்ச் 1ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

சித்தர்தம் அழியாத ஞானச் செல்வங்களின் காப்பு என்ற கருப்பொருளுடன் இம்மாநாடு நடைபெறுகிறது.

சுமதிஸ்ரீ, சஞ்சீவி ராஜா சுவாமிகள், ஸ்ரீ சோ.சோ மீ சுந்தரம், சூரியா சுப்பிரமணியம் உட்பட பல பேச்சாளர்கள் இம்மாநாட்டில் பேசவுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த பல பேச்சாளர்களும் இம்மாநாட்டில் பேசவுள்ளனர்.

குறிப்பாக மக்களிடையே தமிழர் சித்தர் மரபு தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இதுவரை 650 பேர் இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 900 முதல் 1,000 பேராளர்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஆகவே மலேசிய மக்கள் திரளாக வந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என முனைவர் சில்லாழி கேட்டுக் கொண்டார்.
இம்மாநாடு குறித்த மேல்விவரங்களுக்கு 019 9191 932 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *