தேதி : 10 ஜனவரி 2026 (சனிக்கிழமை)

தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகநாள் & எழுத்தறி விழா மிகச் சிறப்பாக 10 ஜனவரி 2026 (சனிக்கிழமை) பள்ளி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு வருகையாளராக உயர்திரு செங்குட்டுவன் வீரன்,
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகையின் தமிழ்மொழிப் பிரிவு உதவி இயக்குநர் அவர்கள் கலந்து கொண்டு, விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அவர்களின் வருகை விழாவிற்கு பெருமையும் சிறப்பையும் சேர்த்தது.
இந்த நிகழ்வில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முதலாம் ஆண்டு மாணவர்களை பள்ளிச் சூழலுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும், தமிழ் மொழியின் அடிப்படை எழுத்தறிவை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த எழுத்தறி விழா ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் உற்சாகமும் விழாவின் வெற்றியை வெளிப்படுத்தியது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக வருகை தந்த சிறப்பு விருந்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு
காஜாங் தமிழ்ப்பள்ளி குடும்பத்தினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.
“தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு”
“இணைவோம்… வெல்வோம்















