


சுபாங் பெர்டானாவில் உள்ள கிளப் சுகான் கம்யூனிட்டி பெகான் சுபாங் சார்பில் 68வது மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி – ஜாலூர் கெமிலாங் – வழங்கும் விழா ஆகஸ்ட் 17, 2025 (ஞாயிறு) காலை 9.30 மணிக்கு சுபாங் பெர்டானா (MBSA உணவக வளாகம் முன்பு) நடைபெற்றது.
விழாவை அமைப்பாளர் திரு. காந்திதாசன் துரைசாமி தலைமையில் நடத்தினார். இவ்விழாவை கோட்டா தாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் யபி.துவான் முஹம்மத் இஸுவான் பின் அக்மத் காசிம் திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கம்பூங் பாரு சுபாங் போலீஸ் நிலையத் தலைவர், ய.ப்ர்ஸ். துவான் இன்ஸ்பெக்டர் அஜாஸ் பின் முகமத் இப்ராஹிம் கலந்து கொண்டார்.





“மலேசியா மதானி – ரக்யாட் திசாந்துனி” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மக்கள் மனதில் தேசப் பற்றை ஊக்குவிப்பதோடு, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, தேசியக் கொடியை பறக்கவிடும் பெருமிதத்தை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டது.
விழாவில் கலந்து கொண்டோர் அனைவரும் “நமது மலேசியா” மீது அன்பும் ஒற்றுமையும் காட்டி, ஜாலூர் கெமிலாங் பறக்கவிட்டனர்.















