பிரிக்பீல்ட்ஸ், கோலாலம்பூர்– ஆகஸ்ட் 17, 2025 (ஞாயிற்றுக்கிழமை):
பிரிக்பீல்ட்ஸ் சென்ட்ரல் ஸ்யூட் வளாகத்தில் இன்று மிகப்பெரிய அளவில் நடைபெற்ற DRNIRR பிரீமியம் அவுட்லெட் & Ashvin எக்ஸ்க்ளூசிவ் பேஷன் திறப்பு விழா, ஆண்டின் மிகப்பெரிய பார்ட்டியாக கவனம் ஈர்த்தது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் சமூகத் தலைவருமான டத்துக் ஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கலந்துகொண்டு திறப்புவிழாவை சிறப்பித்தார். அதோடு, மலேசியாவின் பிரபல கலைஞர் புவன் சுசிலா தேவியும் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தார்.
அதிகாரப்பூர்வ திறப்புவிழா மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற்றது. பின்னர், முழு நாள் கொண்டாட்டங்கள் இரவு 10.00 மணி வரை தொடர்ந்தன. இதில், கண்கவர் ஃபேஷன் காட்சி, பல்வேறு மேடை நிகழ்ச்சிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக சலுகைகள் இடம்பெற்றன

இந்நிகழ்ச்சி வெறும் ஒரு வணிக வளாக திறப்பாக இல்லாமல், வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் ஒரு விழாவாக அமைய, பிரபலங்கள், தொழில்துறை தலைவர்கள், ஃபேஷன் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தை ஒன்றிணைத்தது.
.
இடம்: சென்ட்ரல் ஸ்யூட், பிரிக்பீல்ட்ஸ்
நாள்: ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025















