21.10.2026

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைத் தொழில்துறைகளில் பரவலாகப் பயன்படுத்துவது அவசியம் என டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகள், வாகன உற்பத்தி, தரவு மையங்கள் மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் உற்பத்தித் திறனையும் தொழில்துறை செயல்திறனையும் மேம்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மலேசியாவின் சிப் வடிவமைப்புத் துறையை வலுப்படுத்தும் முயற்சிகளையும் வரவேற்ற அவர், உள்ளூர் நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
Veera Sinnayan















