29 செப்டம்பர் 2026

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள Atlantic Group of Companies Malaysia Executive Chairman & CEO மற்றும் World Tamil Cultural Organization President டத்தோ’ டாக்டர் எம். கோபால் கிருஷ்ணன் FLOGM, உடனடி நிவாரணத்துடன் மறுகட்டமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சுமார் 10 மணி நேரம் கடினமான மலைப்பாதைகள் வழியாக பயணம் செய்து பிதூர் (Bidur) உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், வெள்ளத்தால் வீடுகள், பாலங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
அப்பகுதி தகவலின்படி, 42 பாலங்கள் அழிக்கப்பட்டதுடன், 81 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், 191 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பணிகளுக்காக இதுவரை சுமார் RM200,000 நிதி திரட்டப்பட்டுள்ள நிலையில், மறுகட்டமைப்பின் தேவைகளை கருத்தில் கொள்ளும்போது மேலும் உதவிகள் அவசியம் என டத்தோ’ டாக்டர் எம். கோபால் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள், குளிர்கால ஆடைகள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்குவதுடன், சேதமடைந்த பாலங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், துண்டிக்கப்பட்ட சமூகங்களை மீண்டும் இணைக்கவும் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.















