பாஸ் ஆதரவு பேரவை மத்திய தலைமையகம் (DEWAN HIMPUNAN PENDUKUNG PAS PUSAT),

2026 ஆம் ஆண்டு தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சிறப்பு விடுமுறை (Cuti Peristiwa) வழங்குவதற்கு அனுமதி அளித்த கெடா மாநில அரசுக்கு தனது மனப்பூர்வமான பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த முடிவு, தைப்பூசத்தை கொண்டாடும் இந்து சமூகத்தின்மீது கெடா மாநில அரசின் மரியாதையையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது.
மேலும், இந்நடவடிக்கை கெடா மாநிலத்தில் இன ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்கான அரசின் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
இந்த சிறப்பு விடுமுறை, கெடாவில் வாழும் இந்து பக்தர்கள் தங்களின் குடும்பத்தினருடன் அமைதியான மற்றும் சௌகரியமான சூழலில் தைப்பூசத்தை கொண்டாடுவதற்கு வழங்கப்பட்ட ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாகும்.















