எம்ஜிஆர் நினைவிடத்தில் போட்டி போட்டு செல்பி எடுக்க சிங்கப்பூர் எம்ஜிஆரை சூழ்ந்த எம்ஜிஆர் ரசிகர்கள் போலீசார் அவரை பாதுகாப்பாக மீட்டு அழைத்து சென்றனர்

சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் எம்.ஜி.ஆர். சிறு வயதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நேரத்தில் சிறுவனாக இருந்த சிங்கப்பூர் எம்ஜிஆரை அவரது கரங்களால் அவரை தூக்கி முத்தமிட்டார். அதனை தொடர்ந்து எம்.ஜி ஆரின் திவீர ரசிகராக வளர்ந்த அவர் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் என்ற மாபெரும் நிகழ்வை நவீன யுக்தியுடன் நடத்தி சாதனை புரிந்தவர். மலேசியாவில் பார்வையற்றவர்கள் இல்லங்களுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார். மேலும் தமிழ்நாட்டில் சென்னையில் மாற்றுதிறனாளி பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார் இவ்வாறு நளிந்தவர்களுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு உதவிகள் செய்த சிங்கப்பூரில் பிரபலமான சிங்கப்பூர் எம்ஜிஆர், புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக வண்ணத்தில் தயாரான பிரமாண்ட மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின்பு எம்ஜிஆரின் உற்ற நண்பரான கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கருப்பு சிவப்பு கலரில் கலைஞர் படத்துடன் உருவாக்கப்பட்ட பிரமாண்ட மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி விட்டு அங்கு கூடி இருந்த எம்ஜிஆர் ரசிகர்களுடன் செல்பி குழுபடம் எடுத்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவரது வருகையை அறிந்த எம்.ஜி.ஆர் நினைவிடம் வந்த ஏராளமான பக்தர்கள் இவரை காண சூழ்ந்து கொண்டனர். அவரை அப்பகுதி காவலர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். பின்பு பத்திரிக்கையாளர் பேட்டியை முடித்துக் கொண்டு . எம்.ஜி.ஆர் நினைவிடத்தை பராமரிக்கும் ஊழியர்களுக்கு பண வெகுமதியை வழங்கி மகிழ்ந்தார்















