தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா- நாளை கோலாலம்பூரில் நடைபெறுகிறது

கோலாலம்பூர், டிச 26- 2025

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் 69ஆவது படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது.

 

இதற்காக இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

நடிகர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தை MALIK STREAMS COORPERATION நிறுவனத்தின் டத்தோ அப்துல் மாலிக் வாங்கி பிரம்மாண்டமான முறையில் வெளியீடு செய்கிறார்.

 

அனிருத் இசையமைப்பில் வெளியான இரு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகிறது.

 

ஜனநாயகன் படத்தில் நடிகர்கள் பிரியாமணி, பிரகாஷ் ராஜ், போப்பி டியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *