கிறிஸ்துமஸ் அதிரடி: விலையை உயர்த்தினால் கடும் அபராதம் – களத்தில் இறங்கியது சிலாங்கூர் KPDN!

கிறிஸ்துமஸ் அதிரடி: விலையை உயர்த்தினால் கடும் அபராதம் – களத்தில் இறங்கியது சிலாங்கூர் KPDN!

23.12.2025

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 முதல் 27 வரை 5 நாட்களுக்கு 9 வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கு உச்சவரம்பு விலை நிர்ணயித்து சிலாங்கூர் மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சுபாங் ஜெயாவிலுள்ள Jaya Grocer வணிக வளாகத்தில் உள்நாட்டு வணிகம், வாழ்க்கஒச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் MOHD ZUHAIRI BIN MAT RADEY தலைமையில் 15 அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் வரையிலும், தனிநபர்களுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலையை நுகர்வோர் எளிதில் அடையாளம் காண ஏதுவாக, அனைத்து வணிகர்களும் கட்டாயமாக சிவப்பு நிற விலைப் பட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 2023 முதல் இதுவரை 5,682 வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், விதிமுறைகளை மீறிய 224 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் விலை மோசடியைக் கண்டால் 019-848 8000 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது KPDN-இன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் வழியாக உடனடியாக புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *