கேஎல்ஐஏ-வில் ஐயப்ப பக்தர்களுக்கு இனி ‘விஐபி’ வழித்தடம் – விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்!

மலேசியாவிலிருந்து சபரிமலை செல்லும் 50,000-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இனி அவர்களுக்கென ‘சிறப்பு வழித்தடம் அமைக்கப்பட உள்ளது! 48 நாட்கள் கடும் விரதமிருந்து வெறுங்காலுடன் செல்லும் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்க, அவர்களுக்கு இனி உம்ரா, ஹஜ் பயணிகளுக்கு இணையான உயர்தர வசதிகள், தனி காத்திருப்பு அறைகள் வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் முழு ஆதரவுடன், குடிநுழைவுத் துறையும் விமான நிறுவனங்களும் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்தால், இனி நீண்ட வரிசையில் காத்திருக்காமல் பக்தர்கள் மின்னல் வேகத்தில் பயண நடைமுறைகளை முடிக்க முடியும். இந்த மாபெரும் வசதியை சாத்தியமாக்கிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கும், இடைவிடாது போராடிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ்க்கும் பக்தர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன!















