ஆகாயத்துக்கும் அப்பால் ஏர் ஆசியாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
செப்பாங் டிச 23.2025

ஆகாயத்தில் வெற்றிகரமாக சிறகடித்து வந்த போதிலும், ஆகாயத்துக்கு அப்பால் மக்களை ஒன்றிணைக்க இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஏர் ஆசியா வரவேற்கிறது.
பல நகரங்களுக்கு இடையே விமான சேவை தொடர்பை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி, தரையில் மக்களுடன் இந்த கிறிஸ்துமஸ் குதுகுளத்தை ஏர் ஆசியா ஏற்படுத்தி வருகிறது.
கிறிஸ்துமஸ் குதுக்குளத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர் ஆசியாவை சேர்ந்த ஒரு தொண்டூழிய குழுவினர் ஹவுஸ் ஆப் ஜோய் சேர்ந்த சிறார்களுடன் இணைந்து ஜோய் கார்டன் முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்களுடன் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கான பொருட்களை அன்பளித்ததோடு, ஏர் ஆசியா தொண்டூழியர்கள் இந்த இல்லத்தை கிறிஸ்துமஸ் குதுகுளத்தோடு அலங்கரித்து அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை படைத்து இந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்த முதியோர் இல்லத்தை இவர்கள் சுத்தப்படுத்தி அலங்கரித்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இந்த தொண்டூழியர்கள் தயார் செய்தனர்.
இதனிடையே பெக் சிறார் இல்லத்தை சேர்ந்தவர்களுக்கு ஏர் ஆசியா அத்தியாவசிய பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தியது.
ஆதரவற்ற இந்த சிறார்கள் தங்களின் கவலைகளை மறந்து இந்த கொண்டாட்டத்தில் மூழ்கி மகிழ்ச்சி அடைய ஏர் ஆசியா முக்கிய பங்காற்றியது.
இதோடு முடிவடையாமல், கேஎல்ஐஏ2 விமான நிலையத்தில் புறப்படும் பயணிகளை ஏர் ஆசியா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விடுமுறைக்கு புறப்படும் பயணிகளுக்கு இசை நிகழ்ச்சியுடன் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
தங்கள் நகரங்களுக்கு புறப்படும் பயணிகள் இந்த அற்புதமான நிகழ்வை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
விமான பயணத்தையும் தாண்டி ஒரு கொண்டாட்ட உணர்வுடன் பயணிகள் புறப்படுவது ஏர் ஆசியாவிற்கு பெருமை சேர்க்கிறது.
உலகின் முதல் நிலை மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா, லட்சக்கணக்கான பயணிகளுக்கு தடையற்ற மற்றும் நிறைவான சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறது.
130-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மலிவு விலை கட்டணத்தில் தடையற்ற பயண சேவைகளை ஏர் ஆசியா வழங்கி வருகிறது.















